நடிகர் கீர்த்தி சுரேஷ் களமிறங்கி கலக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்தின் நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், போனி கபூர் இந்தியில் அஜய் தேவ்கன்னை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி உள்ளார். இ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு மைதான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.