நடிப்பு, பாடல் இரண்டுமே இரண்டு கண்கள் மாதிரி : நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். சினிமாவில் பாடகியாக அறிமுகமான 

By leena | Published: Oct 16, 2019 08:10 AM

நடிகை ஆண்ட்ரியா பிரபலமான நடிகையும், பாடகியும் ஆவார். சினிமாவில் பாடகியாக அறிமுகமான  இவர், பச்சை கிளி, முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிப்பதில் மட்டுமல்லாது, பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இவரிடம் நடிப்பு, பாடல் இரண்டிலும் எது முக்கியம் என கேட்டதற்கு, அவர் கூறியதாவது, 'இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. தனித்தனியாக நான் இதுதான் பிடிக்கும்னு சொல்ல முடியாது. ரெண்டுமே பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பட வாய்ப்பு குறித்து  கூறுகையில், 'இந்த வருடம் ஆண்ட்ரியாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பாடகியாக மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துவிட்டேன்.' என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc