உலகநாயகனுடன் இணைந்த இசைப்புயல்! பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்ப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது.

By manikandan | Published: Jul 16, 2019 04:02 PM

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் பிஸியானதால் படம் தொடங்க காலதாமதம் ஆனது. இதனிடையே கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து இயக்க இருந்த தலைவன் இருக்கிறான் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இபபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். 2000 ஆண்டில் வெளியன தெனாலி படத்தில் தான் கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த கமல்ஹாசன் திரைப்படமாகும். அதன் பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படம் உருவாக உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc