பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் மருத்துவ மாணவி பரிதாப பலி .!

  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். 
  • அப்போது எரிமலை வெடிப்பில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில்  எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கினர்.

பின்னர்  மீட்பு பணிகள் தீவிரடைந்தது. எரிமலை வெடிப்பில் சிக்கி 9 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 8 பேர் மாயமாகினர். அவர்களில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விவரங்களை நியூசிலாந்து வெளியிட்டு உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

அவர் ஆஸ்திரேலியாவில்  மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவம் படித்து வந்தார். எரிமலை வெடிப்பில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை மற்றும் சகோதரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது தாய் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

author avatar
murugan