3 மாதமாக எஜமானர் இறந்தது தெரியாமல் அவரின் வரவுக்காக காத்திருந்த நாய்!

3 மாதமாக எஜமானர் இறந்தது தெரியாமல் அவரின் வரவுக்காக காத்திருந்த நாய்.

முதலில்  கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது சீனாவில் இந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் 3 மாதத்திற்கு முன் உயிரிழந்த தனது எஜமானருக்காக, தொடர்ந்து 3 மாத காலங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் ஒரு நாயின் பாச போராட்டம் காண்போரை கலங்க வைத்துள்ளது. 

7 வயதான அந்த நாய்குட்டியின் உரிமையாளர் சியாவ் பாவோ, இவர் பிப்ரவரி மாதம் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அந்த நாயும் அவருடனே கூட சென்றுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ந்து 5 நாட்களிலேயே உயிரிழந்தார். 

இதனை அறியாத அந்த வளர்ப்பு நாய், சியாவ் பாவோ மட்டும் மீண்டும் வருவார் என்று அந்த மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், அந்த வளர்ப்பு நாய்க்கு உணவளித்து வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்ட போதிலும், அது மீண்டும் வந்து மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்துள்ளது. 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.