Google Pay-யில் இந்த புதிய அம்சம் தற்பொழுது 35 நகரங்களில் கிடைக்கிறது!

தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த google pay வசதி மூலம் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பக்கூடிய நிதியையும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் google pay பயன்பாட்டில் கடந்த மாதம் தொடங்கிய புதிய அம்சமான தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், பயனர்களுக்கு எந்தெந்த கடைகளில அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது என்ற தகவலைக் google pay மூலம் பார்க்க அனுமதிக்கிறது. முதல் முதலாக இந்தியா முழுவதும் ஒரு சில நகரங்களில் மட்டும் இந்த புதிய அறிமுகம் செய்யப்பட்ட வந்த நிலையில் இந்த ஸ்பாட் அம்சம் இப்போது தமிழ் நாட்டில் 35 நகரங்களில் கிடைக்கிறது.

தற்பொழுது இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள 35 நகரங்கள் . கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு பகுதியில் கிடைக்கிறது,மேலும் தெலுங்கானாவில் ஹைதராபாத், ரங்க ரெட்டி, மற்றும் செகந்திராபாத்திலும் கிடைக்கிறது.கேரளாவில் கொச்சி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட 35 நகரங்களுக்கு தற்பொழுது  இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் முதற்கட்டமாக இந்த சேவை கிடைக்கிறதாம். பின்வரும் நாட்களில் இந்த அம்சம் தமிழ்நாட்டில் மற்ற நகரங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.