சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

சரும பிரச்சனைகளை போக்கும் சந்தன தூள். 

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மெருகூட்டுவதற்காக,  கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பல பக்க  ஏற்படுகிறது.

தற்போது,  இந்த பதிவில் இயற்கையான முறையில் சரும அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

தேவையானவை 

  • சந்தன தூள் 
  • ரோஸ் வாட்டர் 

செய்முறை 

முதலில் ஒரு பௌலில் சந்தன தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு ரோஸ் வட்டாரை கலந்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். 

பின், அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்களும் மருந்து விடும். மேலும் இவ்வாறு செய்வதால் உடல் வெப்பமும் தணிந்து விடும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube