இன்றும் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.

களமிறங்கிய  நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை இழந்து  விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டியை மீண்டும் இன்று நடைபெறும் என   நடுவர்கள் அறிவித்தனர்.

நேற்று நின்ற இடத்தில் இருந்து இன்று போட்டி தொடங்கும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்றும் மழையின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையமான “அக்கு வெதர்” கூறியுள்ளது.இன்று மதியம் வரை மழை வாய்ப்பு உள்ளது.ஆனால் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி பாதிப்படையலாம் என கூறியுள்ளது.

மீண்டும் மழை இரவு பெய்ய வாய்ப்பு இருப்பதாக “அக்கு வெதர்” அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

author avatar
murugan