கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்!ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் மூன்றாவது கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.