5 மாதங்களில் 54 அறுவை சிகிச்சை! கங்கானா ரனாவத்தின் சகோதரியின் உருக்கமான பதிவு!

நடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால்

By Fahad | Published: Apr 01 2020 02:26 AM

நடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இந்நிலையில், கங்கானாவின் சகோதரியான ரங்கோலி தனது இணைய பக்கத்தில் தனக்கு நடத்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவன் என்னிடம் காதலை தெரிவித்தான். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்று உணருவதற்குள் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது. எனது உடலில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 7 மாதனங்கள் படுத்தாத படுக்கையாக இருந்தேன்.  ஏழு மாதம் களைத்து எழுந்து பார்க்கும் போது, எனது முகத்தை பார்க்க எனக்கே பயமாக இருந்தது. ஒருவரின் காதலை ஏற்றுக் கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா? என்னுடைய உடல் உறுப்புகளை சரி செய்ய 5 மாட்டாஹணங்களில் 54 அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டியிருந்தது. எனது உடலி பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு பின்பும், குழந்தை பிறந்த பின்பு என்னால் பாலூட்ட முடியவில்லை என்பது எனது ஒட்டுமொத்த குடும்பத்தின் வேதனையாக இருந்தது. என்னை பார்ப்பவர்கள் நான் அழகை இழந்துவிட்டதாக வருந்துகிறார்கள். உடலின் மொதத அழகும், கரைந்து இரத்தத்துடன் வலியுடனும் உருகும் போது, அந்த அழகு பெரிதாக தெரியவில்லை. நான் இப்போது எனது மனவலிமையை நைனிகாந்து பெருமை படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.