சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேருக்கு ஆயுள் ..!

கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த 13 வயது சிறுமி  கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்

By Fahad | Published: Apr 01 2020 04:27 AM

கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த 13 வயது சிறுமி  கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் காணவில்லை என அவரது பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் சிறுமியின் வீட்டின் அருகில் இருந்த கலைச்செல்வி மற்றும் குமுதவல்லி வேலை வாங்கி தருவதாக கூறி திருப்பூர் அழைத்து சென்று கல்பனா ,சந்தான மேரி , மணி ஆகியோருடன் பாலியல் தொழிலில் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலைச்செல்வி , குமுதவல்லி ,கல்பனா ,சந்தான மேரி ,மணி உட்பட 7 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கலைச்செல்வி , குமுதவல்லி ,கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ,சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கினார்.சந்தான மேரி ,பிரதாப் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாதததால் அவர்களை விடுதலை செய்தனர்.  

More News From 4 year