300 கோடி பிரமாண்ட படத்தில் சிறு வயது விக்ரமாக நடிக்க ஆள் தேவை!

சீயான் விக்ரம் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தது வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் உலகநாயகன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பயங்கரமான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தூங்கா வானம் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படங்களை தொடர்ந்து ஒரு சரித்திர படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். கர்ணனை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு இந்த படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு மஹாவீர் கர்ணா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்ட்தை R.S.விமல் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்த்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் தான் சிறு வயது விக்ரமாக நடிக்க 8 முதல் 15 வயது வரையுள்ள விக்ரம் சாயல் இருக்கும் ஒரு பையன் தேவை. அவனுக்கு மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. Source : CINEBAR.IN

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment