‘மஹாவீர் கர்ணா’ படத்திலிருந்து விலகிய விக்ரம்.! புது டைட்டிலுடன் பிரமாண்டமாக உருவாக்க முனையும் இயக்குனர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய பிரபலமான ஆர்.எஸ்.விமல் கடந்த 2018-ம் ஆண்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் விக்ரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய … Read more

300கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரமின் பிரமாண்ட படம் கைவிடப்பட்டதா.?

விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படமான மகாவீர் கர்ணா படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆர் . எஸ். விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘மகாவீர் கர்ணன்’. ‘என்னும் நின்றே மொய்தீன் ‘என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர் தான் ஆர். எஸ். விமல் என்பது குறிப்பிடத்தக்கது. 300கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த பிரமாண்ட படம் மகாபாரதத்திலுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் … Read more

300 கோடி பிரமாண்ட படத்தில் சிறு வயது விக்ரமாக நடிக்க ஆள் தேவை!

சீயான் விக்ரம் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தது வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் உலகநாயகன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பயங்கரமான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தூங்கா வானம் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். இப்பட … Read more

32 மொழிகளில் வெளியாகும் சியான் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' படம்

  சியான் விக்ரம் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 300 கோடி செலவில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளது.மேலும் படத்தை வேறு 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் உலக அளவில் இந்த படம் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படத்தினை நிராகரித்த சியான் விக்ரம்-ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்…!!

“மஹாவீர் கர்ணா” படம் ரூ.300 கோடி ரூபாயில் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இதில் நடிகர் சியான் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிப்பார் என இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அறிவித்தார். முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த ரோலில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், என்.டி ராமா ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும்..? என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். … Read more