242 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ! இனி பயன்படுத்தினால் 100 முதல் 1 லட்சம் வரை அபராதம்!

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை செய்து தமிழக அரசு உத்தரவு விட்டது.ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்டுத்துவதாக புகார் எழுந்த நிலையில் சென்னையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் கண்காணிக்க சென்னை மாநகராட்சி வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழு இதுவரை 242 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், மேலும் மாநகராட்சி அனுமதி பெறாமல் கடை இயங்கி வந்தாலும் உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
இந்நிலையில் இன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்திருப்பவரும், விற்பனை செய்பவரும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்பவருக்கு முதல் முறை 25 ஆயிரமும், இரண்டாவது முறை 50 ஆயிரமும், மூன்றாவது முறை 1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை  பயன்படுத்தினால்  முதல் முறை பத்தாயிரம் ,இரண்டாவது முறை 15,000 ,மூன்றாம் 25,000 அபராதம் விதிக்கப்படும்.
சிறு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ஆயிரம், இரண்டாம் முறை 2000 ,மூன்றாவது முறை 5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களை வீடுகளில்  பயன்படுத்தினால் முதன் முறை 100 , இரண்டாவது முறை 200, மூன்றாவது முறை 500 வரை அபராதம் விதிக்கப்படும். இதை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என  சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு செய்து உள்ளது.மேலும் இன்று முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan