#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

  • கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும்

By Fahad | Published: Apr 06 2020 02:24 AM

  • கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
  • இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என சுனில் அரோரா அறிவித்தார். இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இருதொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட முறையே திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினர்.