ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்.!

ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. செங்கல்பட்டு பையனுரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 21 அடுக்குமாடி கட்டமாக ஐ.டி பூங்கா அமைகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்