இலவசமாக இந்தியாவிற்கு 1.7 லட்சம் முழுகவச உடைகளை அளித்துள்ளது சீனா.!

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டையும் தாக்கி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், இந்தியாவில் பாதுக்காப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் முழுகவச உடைகள் இதுவரை 20,000 கவச உடைகள் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளதாம். இதனுடன் சேர்த்து 1 லட்சத்து 90 முழுஉடல் கவசம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாம்.

இந்தியாவில் ஏற்கனவே 3,87,473 கவச உடைகள் உள்ளன. இதுவரை 2.94 லட்ச கவசஉடைகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், 80 ஆயிரம் கவச உடைகளை சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், சீன அரசானது இந்திய அரசிற்கு 1.70 லட்சம் முழு உடல் கவச உடைகளை (பிபிஇ ) இலவசமாக வழங்கியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, இந்தியாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய  விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சீன அரசானது, இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. சீனாவின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசானது உடனடியாக ஏற்றுமதி தடையை நீக்கி சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. அதற்கு நன்றிக்கடனாக சீன அரசு தற்போது முழுஉடல் கவச உடைகளை இலவசமாக இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.