விளையாட்டும் , கல்வியும் பாட புத்தகமாக இணைய வேண்டும்…சச்சின் டெண்டுல்கர் அறிவுரை..!!

பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தையும் இணைக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற  ‘உலக குழந்தைகள் தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தையும் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறும்போது, “விளையாட்டிற்கு தோலின் நிறம் தெரியாது, உங்கள் பேங்க் பேலன்ஸ் தெரியாது, ஆண்/பெண் பேதமும் அறியாதது. விளையாட்டிற்கு பாகுபாடு கிடையாது என்று அறிவுரை கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

மேலும் அவர் பேசும் போது எனக்கு சிறுவயது முதலே விளையாட்டு என்றாலே உற்சாகம்தான், பள்ளியில் அது நம் அழுத்தங்களைக் குறைக்கும் ,  நான் டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என்று நிறைய விளையாட்டுகளை விரும்பி விளையாடுவேன்.விளையாடும் போது விளையாட்டு களத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்களை களத்துக்கு வெளியேயும் நான் நடைமுறைப்படுத்துவேன். அனைவரும் அச்சமின்றி இருக்க வேண்டும் அக்கறையின்றி அல்ல. உங்கள் ஆசிரியர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.விளையாட்டும், கல்வியும் ஒன்று சேர்ந்து பயணித்து அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுக் கல்வி அவசியம், கட்டாயம் என்று லிட்டில் மாஸ்டர் என்று வருணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment