யுவனின் தெறிக்கும் இசையில் தனுஷ் நடிக்கும் மாரி 2 ட்ரெய்லர்!!!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி . இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைதத்திருந்தார்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இதில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், மலையாள நடிகர் டோவினோ  தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இப்படத்திலிருந்து ஏற்கனவே ரவுடி பேபி எனும் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று காலை இதன்  ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அதன் ட்ரெய்லர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment