இந்தியாவில் களமிறங்கும் ஜாகுவார் எக்ஸ்ஜே 50! அதன் சிறப்பம்சங்கள்!!

கார் உற்பத்தியில் தனக்கென தனி மார்க்கெட் கொண்டுள்ள நிறுவனம் ஜாகுவார். இந்த நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது இதனை கொண்டாடும் விதத்தில் தற்போது, புதிய எக்ஸ்ஜே 50 எனும் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இது சிறப்பு மாடலாக களமிறங்கி உள்ளதால் இதில் பல வசதிகள் உள்ளன. புதிய க்ரோம் க்ரில் அரணுடன் க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், 19 அங்குல அலாய் வீல்கள், இலுமினேட்டட் விளக்கொளியில் மிளிரும் ட்ரெட் பிளேட்டுகள் இதன் முக்கிய அம்சங்கள்.
புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே50 கார் மாடலானது, ஃப்யூஜி ஒயிட், சான்டோர்னி பிளாக், லோரி புளூ மற்றும் ரோசெல்லோ ரெட்ஸ் ஆகிய 4 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே50 மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதம் இருக்கும். இந்த காரில் 8 ஸ்பீடுஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் 1.14 கோடி ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக கொண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment