பூமியின் ஒரு நகரிலிருந்து மற்றோர் நகருக்கு ராக்கெட்டில் பயணிக்கும் திட்டம்…!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்  பூமியின் ஒரு நகரிலிருந்து மற்றோர் நகருக்கு ராக்கெட்டில் பயணிக்கும் திட்டம் சில ஆண்டுகளில் சாத்தியமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளை, மனிதர்களின் பயணத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும், விமானங்களில் எகானமி வகுப்புக்கான செலவில் இதை நடைமுறைப்படுத்தலாம் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.

நியூயார்க் – ஷாங்காய் இடையிலான 15 மணி நேர விமான பயணம், இந்த ராக்கெட் பயணத்தில் வெறும் 39 நிமிடங்களாக குறையும் என்றும், இதற்கான கிராபிக்ஸ் வீடியோவையும் வெளியிட்டிருந்தது.

ராக்கெட் மூலம் உலகின் முக்கிய நகரங்களிடையே அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள்ளாக பயணிக்க முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருந்தது. இந்த திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குவைன் சாட்வெல் (Chief Operating Officer Gwynne Shotwell) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment