டிசம்பர் 11 ↔ உலக மலைகள் தினம்

உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் பிரதான இடம் பெறுகின்றன. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை மழையின் மூலமாக வழங்குவதுடன், பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் வாழ்விடங்களாகவும் விளங்குவதுடன், பல பழங்குடி மக்களின் வாழிடமாகவும் விளங்குகின்றன.
காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களினால் மலைகள் அழிவினை எதிர்நோக்குகின்றன.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 11ம் நாள் உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment