சபரிமலைக்கு………செல்லும் பெண்கள் மத உணர்வுகளை மதிக்காதவர்கள்………இல.கணேசன் பேச்சு…!!

கேரளா:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்தது இதன் படி அக்.18 ல் பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் ஐயப்பனை காண 3பெண்கள் நேற்று சபரிமலைக்கு சென்றனர் ஆனால் சன்னிதானத்தை நெருங்கிய நிலையில் அவர்களை கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தேவசம் போர்டு உத்தரவால் அனுப்பபட்டனர்.மலையேறிய பெண்களில் ஒருவர் செய்தியாளர் மற்றொருவர் பெண்ணியவாதி ஆவர்.
இந்நிலையில் நெல்லையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்  இது குறித்து பேட்டியளித்தார்.அதில் ஐயப்பனின் மீது பக்திகொண்ட பெண்கள் யாரும் கோயிலுக்கு தற்போது செல்லவில்லை.அங்கு செல்லும் பெண்கள் மத உணர்வுகளை மதிக்காதவர்கள். ஐயப்பன்கோவிலில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு மாநில அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
சபரிமலை விவகாரத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேதனையளிக்கிறது. மத உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா எந்த நோக்கத்திலும் தேர்தல் ஆதாயம் தேடவில்லை என்று கூறினார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment