சன்னி லியோனின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு டிச.27 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிக்கும் இப்படத்தை ஷ்டீவ்ஸ்கார்னர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.இதனை ட்விட்டரில் சன்னிலியோன் ரசிகர்கள் #SunnyLeoneInTamil #SunnyLeoneInSouth என பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் ஜெயின் ‘வடகறி’ படத்திலும்,அதேபோல் தெலுங்கிலும் கவர்ச்சி பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.