கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ. வங்கி

 
வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதோடு, மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment