ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய அவதாரம்! தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் முதல் படம்!! கனா ட்ரெய்லர் ரிப்போர்ட்!!!

டிவி தொகுப்பாளினியாக இருந்து, பிறகு கூட்டத்தில் ஒரு நடிகையாகி பிறகு கதாநாயகி அந்தஸ்து பெற்று, தற்போது கதைகளின் நாயகியாக மாறி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் கதாபாத்திர தேர்வுகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கிறது. இவர் தற்போது வடசென்னை படத்திற்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் கனா.

இப்படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகன் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்துள்ளார். இதன் இயக்குனர் சிவாவின் நண்பரான அருண்ராஜா காமாரஜ். இவருடன் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த காரணங்கள் போதும் ஒரு சாமானிய சினிமா ரசிகனை எதிர்பார்க்க வைக்க.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடபட்டது. தனது அப்பாவின் கண்ணீரை துடைக்க கிரிக்கெட்டை  ஆண்களுக்கு நிகராக கையில் எடுக்கும் ஓர் பெண். அதனால் அவர்  மீது விழும் சமூக பார்வை. காதல், சோகம், விடாமுயற்ச்சி என ட்ரெய்லர் விரிகிறது. இடையே சிவகார்த்திகேயனின் கெஸ்ட் ரோல். கொஞ்சம் சுசீந்திரனின் ஜீவா பட சாயல் தெரிந்தாலும் படத்தின் ட்ரெய்லர் நன்றாக தான் இருக்கிறது. படம் ரிலீஸானால் தான் ரசிகனின் எதிர்பார்ப்பை இதே அளவு பூர்த்தி செய்கிறதா என பார்ப்போம் .

படத்தின் ட்ரெய்லரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ரிலீஸ் செய்திருப்பது, தயாரிப்பாளர் சிவாவின் நல்ல யோசனை.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment