இந்த வகை செருப்பு அணிவதால் உடலுக்கு ஆபத்து!

இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன.
நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.Image result for high heels
நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக இந்த கால பெண்கள் மாறியுள்ளனர்.
Image result for high heels
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும். ஆனால் இதையே தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க  வேண்டியிருக்கும்.
  Image result for high heels
இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.  அதிக உயரமாக பாதணிகள் கொஞ்சம் சறுக்கினாலும் கீழே  விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் கால் தடுமாறினாலும்  தசைப்பிடிப்பு ஏற்படலாம். Related image
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த வகை காலணிகளால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கால பெண்கள் இந்த வகை காலணிகள் அணிவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment