இந்தோனேசியா பலி எண்ணிக்கை 1600_ஐ தாண்டியது…

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,600-ஐத்  தாண்டியுள்ளது.
சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்.  இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலு நகர மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து  மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில் சனிக்கிழமை கூறும்போது, “சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பலு நகரத்தில் இன்னும் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அத்தகைய சடலங்கள் மீட்புக் குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. முடிந்த அளவு நாம் மாசு ஏற்படாமல் அந்த உடல்களை அகற்ற வேண்டும். நாங்கள் எங்கள் குழுவினருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் மாசு ஏற்படலாம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.  இதுகுறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி  தீவில் ரிக்டர் அளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment