அறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா……அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம்..!!!

ஆறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா இன்று கோடியோற்றத்துடன் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றும் இந்த விழாவனது சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது.

Related image

ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று ஈசனோடு ஞானமொழி பேசுமுகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்று ஒன்று சூரனை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணபுறிய வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும் ஆதி அருணாச்சல மூர்த்தி அமர்ந்த பெருமானே…!!! என்று உணர்ச்சி பொங்க அப்பன் முருகனை கைத்தொழ வேண்டிய சரியான தருணம்.6 நாட்கள் முருகனை முழு நேர சிந்தையில் நிறுத்தி சித்தம் முழுவதும் சரவணனே என்று சர்வமும் அவனே என்று நம்பியிருந்தால் யாம் இருக்க பயமேன் என்று வந்து நிற்பர் அப்பன் முருகன்.

Image result for முருகன்

முருகனுக்கு எத்தனை விரத நாட்கள் இருந்தாலும் இந்த சஷ்டி விரதம் மிகவும் விசேஷமானது.அதிலும்  ஆறு நாட்கள் ஆறுமுகனை அவரது பக்த கோடிகள் உலமெங்கும் வழிபடுவார்கள்.அரோஹரா கோஷத்துடன் ஆறுபடை வீடுகளிலும் இன்று கந்த சஷ்டி விழா வெகுச்சிறப்பாக தொடங்குகிறது.அதன் படி இன்று தொடங்கி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13 தேதி நடக்கிறது.அய்யனை நாமும் வழிபடுவோம் அவர் இருக்க நமக்கு என்ன பயம் எல்லாம் கந்தன் திருவருள் துணை நிற்கட்டும்.

Related image

 வேலும் மயிலும் துணை நிற்கட்டும் சுபம்…

author avatar
kavitha

Leave a Comment