அப்டியே ப்ரீயா இருந்தா ஜமைக்கா பக்கம் வாருங்களேன் …!அப்டியே ஜாலியா இருக்கலாம்…!அழைப்பு விடுத்த அதிரடி டி-20 மன்னன் …!

ஜமைக்கா வந்து என்னை சந்தித்து சந்தோசத்தை உணருங்கள் என்று  அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில்,  பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக டிம் பெய்ன் பொறுப்பேற்றுள்ளார்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிது.

Image result for captain steve smith

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஃபேன் கிராஃப்ட் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்த நிலையில், தனது தவறை ஒப்புக் கொள்வதாக ஃபேன் கிராஃப்ட் தெரிவித்தார்.

Image result for captain steve smith
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிரிக்கெட் விளையாட்டை அதற்குரிய கவுரவத்துடன் விளையாட வேண்டும் என்பதே தனது கருத்து என்றும், பந்தை சேதப்படுத்திய விஷயம் தனக்கு தெரியாமல் நடந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றும் ஸ்டீவ் ஸ்மித் தனது விளக்கத்தில் கூறியிருந்தார். Image result for steve smith warner

ஆஸ்திரேலிய பிரதமரான மால்கம் டர்ன்புல் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்த கருத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் இதுபோன்ற தரக்குறைவான செயலில் ஈடுபட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல்வேறு தரப்பிலும் இருந்துக் கண்டனங்களும், நெருக்கடியும் அளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

Image result for captain steve smithஇந்நிலையில், சூதாட்டப் புகாரில் சிக்கி தடைவிதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் மீது எழுந்துள்ள நெருக்கடி காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது அணியின் நிர்வாகம்.

Image result for steve smith warner

இந்நிலையில்  ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 3வீரர்களும் உடனடியாக நாடு திரும்ப அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.மேலும் வார்னரின் ஹைதராபாத் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் கண்ணீர் மல்க பேசினார்கள்.ஆனால் வார்னர் மட்டும் இனி ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட மாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,இது என் சம்பந்தபட்டதல்ல என்றாலும் அது நடந்துவிட்டது,தூசியும் தட்டபட்டுவிட்டது.ஓராண்டு என்பது கொஞ்சம் கடுமையானது தான் .அனால் மூன்று இளைஞர்களும் இதனை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.கவலைவேண்டாம்.நிறைய வாழ்க்கை இன்னும் இருக்கிறது.இத்துடன் நின்றுவிடாதீர்கள்.ஜமைக்கா வந்து என்னை சந்தித்து சந்தோசத்தை உணருங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment