அடடே…. விமான நிலையத்துல வச்சே முடிச்சிட்டாங்களா..!!!

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத் ஜகர்தாவில் தற்போது நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டார். இதில் பெண்கள் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில், ஜப்பானின் யூகிரியை இறுதி போட்டியில் எதிர்கொண்டார்.

இந்த போட்டியின், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விக்னேஷ் போகத் இறுதியில், யூகியை தோற்கடித்து அபாரமாக தங்கம் வென்றார்.
தங்க மங்கையாக இந்திய திரும்பிய விக்னேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment