பொறுப்பா இருக்க வேண்டாமா..?அட போங்க தாதா..!கமெண்ட்டால் கலாய்த்த யுவராஜ்..கலகல!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் வம்பிழுத்து வேடிக்கையாக கிண்டல் அடித்துள்ளார்.

கங்குலி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அதற்கு கிண்டலான கமெண்ட் ஒன்றையை பதிவு செய்து உள்ளார்.

கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1996ல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட்போட்டியின் போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை பகிர்ந்தார்.இதை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.ஆனால் இதை யுவராஜ் நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார்.

https://www.instagram.com/p/B8ec_bqge62/

கங்குலி பதிவிட்டுள்ள புகைப்படத்தில் “கெட்டி இமேஜ்ஸஸ்’ என்ற நிறுவனத்தின் லோகோ இருக்கிறது.

இதைக் சுட்டிக்காட்டிய யுவராஜ் தாதா நீங்கள் தற்போது பிசிசிஐயின் தலைவர். தயவுசெய்து கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என்று கமெண்ட் மூலம்  வம்பிழுத்தார். இந்தப் பதிவு  சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி  உள்ள சூழலில் இதற்கு கங்குலி இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.யுவராஜ் இயல்பிலேயே மிகவும் கலகலப்பு குணம் கொண்டவர் என்பத அனைவரும் அறிந்த ஒன்று தான். கங்குலியின் இந்த பதிவிற்கு ஜாம்பவான் சச்சிந் டெண்டுல்கரும் கமெண்ட் செய்து உள்ளார். அதில் கங்குலியின் இந்த புகைப்படம் முலம் லார்ட்ஸில் நம் தாதா ஆடிய ஆட்டம் தான் என் நினைவிற்கு வருகிறது என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து உள்ளார்.

author avatar
kavitha