இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!

இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!

திருச்செந்தூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கொலை வழக்கில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் இருந்தது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஹரிகிருஷ்ணனை, தற்போது  சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஜிபி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தலைமறைவாக இருந்த வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

விருதுக்கு ஏங்குகிறேன்! பார்த்திபன் ஏக்கம்
எந்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்!
இவ்வளவு நாள் வாட்ஸ்அப் உபயோகிக்கிறீர்களே.. இத கவனிச்சீங்களா?
SBI Clerk பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது..!
திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.!
7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் ! அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் - மு.க.ஸ்டாலின்
மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் - 5பேர் பலி, 34 பேர் படுகாயம்!
அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?
பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை 5 ரூபாய்க்கு மேல் விற்பனை.!