உங்கள் நட்பு எந்த மரத்தை போன்றது!உன் நண்பன் யாரென்று சொல்!

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன். நம்முடைய  குணம் , நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம்.நம் வாழ்வில் நல்ல மனைவியை போல, நல்ல நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்.

Related image

நாம் அனைவரும் அம்மா, அப்பா இவங்களை விட நம் வாழ்க்கையில் அதிகமாக நேரத்தை செலவிடுவது நம்முடைய நண்பர்களுடன் தான்.இந்த நவீன காலத்தில் அனைத்து விஷயங்களும் விரைவாக நடக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் 50 ஆண்டுகள் கழித்து பிறகு பார்த்தால் நம் நினைவிற்கு வருவது நண்பர்கள் மட்டும் தான்.

இந்த உலகில் சிலர் பெற்றோர் ,  காதலி , உறவினர் இவர்கள் அனைவரும் இல்லாமலும்  கூட வாழ்ந்து இருப்பவர்களை நாம் பார்த்து இருக்கலாம். ஆனால் நண்பன் இல்லாமல் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது.

Image result for நண்பர்கள் தினம்

தினமும் நாளிதழ்களில் பார்க்கும்  பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக  எனது நண்பன் என கூறுவார்கள் .அதேபோல திருட்டு , கொலை போன்ற தீய செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.

எனவே நட்பு தான் நம்மை யார் என்பதை நிர்ணயிக்கின்றது . சில நேரங்களில் நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம்.இந்நிலையில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி பனைமரம், தென்னைமரம், வாழைமரம் ஆகிய மூன்று மரங்களை வைத்து எளிமையாக கூறியிருப்பார்.

பனைமரம் :

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை வைத்து தன் உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது.அதேபோல நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.

Image result for பனைமரம்

தென்னைமரம்:

தென்னை மரம்  நாம் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்திற்கு இணையானவன்.

Image result for தென்னைமரம்

வாழைமரம் :

Image result for வாழைமரம்

வாழைமரம் தினமும் நாம் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூன்று பேரில் பனைமரம் போன்றவனை நண்பனாக  தேர்ந்தெடுக்க வேண்டும் என கண்ணதாசன் கூறினார்.

 

author avatar
murugan