தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் ராகவா லாரன்ஸ் !

நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவாதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி  அளித்துள்ளார்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் திண்டாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே, அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள, அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவாதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி  அளித்துள்ளார்.