கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டிருந்தாலும் நீங்கள் இந்த ஐரோப்பிய நாட்டுக்குள் செல்லலாம்!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு தடுப்பூசியை போட்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவிற்குள் நுழைய க்ரீன் பாஸ் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் செல்வதற்காக வழங்கப்படுவது தான் க்ரீன் பாஸ். ஆனால், இந்திய பயணிகள் பலர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் அல்லது ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழுடன் சென்றாலும் சில ஐரோப்பிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்துதலை விதித்து வந்தது.

இந்நிலையில், இந்தியா இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சிகளிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஆஸ்திரியா, ஜெர்மனி ஸ்லோவேனியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு க்ரீன் பாஸ் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது எஸ்டோனியாவும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு தடுப்பூசியை போட்டுக் கொண்ட அனைத்து இந்திய பயணிகளுக்கும் கிரீன் பாஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

author avatar
Rebekal