நீங்களே முதலமைச்சராக இருங்கள் …!அதிமுகவுக்கு தினகரன் தூது …!அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
 

பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
 
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று நேரம் கேட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

அதிலும் குறிப்பாக 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார்.ஆனால் திரை மறைவில் எங்களிடம் பேசும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேடையில் எங்களை விமர்சிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் தங்கமணி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  கட்சிகளை இணைத்துக்கொண்டு நீங்களே முதல்வர் பதவியில் இருங்கள் என்று டிடிவி தினகரன் கடந்த மாதம் அதிமுகவுக்கு தூதுவிட்டார். தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி   தெரிவித்துள்ளார்.

Recent Posts

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.! 

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

4 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

4 mins ago

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

31 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

54 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

56 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

1 hour ago