கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோவில் நடித்த யோகிபாபு, நிரோஷா..!

கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள முதன்முதலாக பரவியது. பின்னர் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஜப்பான் நாடுகளில் பெருமளவில் பாதித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த76 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதுவே இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு..

இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய ,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையெடுத்து தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கொரோனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும்,எதை பின்பற்றவேண்டும் என்பதை பற்றி வீடியோவில் நடிகர் யோகி பாபு, ராம்கி, நிரோஷா ஆகியோர் நடித்துள்ளனர்.