“தீராத நோய் மற்றும் மன நோயை தீர்க்கும் யோக நரசிம்மர் கோவில்”

நரசிம்மரிடத்தில் நாளை என்பது இல்லை என்ற அடிப்படையில் நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அன்றே  என்பது ஐதீகம் .

கோவிலின் சிறப்பு:

யோக நரசிம்மர் கோவில் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்திருத்தலம் 65 ஆவது திவ்ய தேசமாகும். இக்கோயில் கிட்டத்தட்ட 2000 வருடம் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலுக்கு செல்ல 1305 படிக்கட்டுகள் கடந்து செல்ல வேண்டும். இங்கு உள்ள நரசிம்மர் 11 மாதங்கள் யோக நிலையில் காட்சியளிக்கிறார். கார்த்திகை மாதம் மற்றும் கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதனால் இந்த மாதம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி மாறி போனவர்கள், பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இங்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் 24 நிமிடங்கள் இக்கோவிலில் தங்கினால் மனக் கவலைகள் மனப்பிரச்சனைகள் தீரும்.

புதிய வீடு கட்ட மற்றும் நிலம் வாங்க இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதிகளில் கற்களை எடுத்து கோபுரம் போல் கட்டி வேண்டிக் கொண்டால் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு உள்ள குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

மேலும் கற்கண்டு வெள்ளம், வாழைப்பழம்,தயிர் சாதம் போன்றவற்றை பிரசாதமாக தருவதால் சகல ஐஸ்வர்யங்களையும் நரசிம்மர் வழங்குவார். இத்திருத்தலத்தில் உள்ள படிகளை கடந்து வந்து தரிசனம் செய்தாலே பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்பார்கள் .

இங்கு ஒரு நாழிகை வழிபட்டால் 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டதற்கு சமமாகும். சனிக்கிழமைகளில் இத்திருத்தலத்துக்கு செல்வது சிறப்பாகும்.

காலை 8-5.30 வரை நடை திறந்திருக்கும்.

ஒருமுறை வந்து சோளிங்கபுரம் யோக நரசிம்மரை தரிசித்து மன சங்கடங்கள் தீர்ந்து மன அமைதி பெற்று செல்லுங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.