yennai arindhaal

இந்தியில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’! ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

By

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருப்பார்கள். அருண் விஜய்,  அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

   
   

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது என்றே கூறலாம். அதற்கு காரணம் என்னவென்றால், இயக்குனர் கெளதம் மேனனும் நடிகர் அஜித்தும் கூட்டணியாக இணைந்தது தான். அது மட்டுமில்லாமல் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் ஆகி இருந்தது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் படம் ரீமேக் ஆகவுள்ளதாம். இயக்குனர் கெளதம் மேனன் தற்போது துருவநட்சத்திரம் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படம் வெளியான பிறகு இயக்குனர் கெளதம் மேனன் நடிகர் சல்மான் கானை வைத்து ஹிந்தியில் என்னை அறிந்தால் திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம். வழக்கமாக தமிழில் ஒரு திரைப்படத்தினை எடுத்து அதனை இந்தியில் ரீமேக் செய்தால் கண்டிப்பாக அதில் மாற்றம் செய்து தான் ரீமேக் செய்யவார்கள்.

எனவே, அதைப்போலவே இந்த என்னை அறிந்தால் படத்திலும் சில மாற்றங்களை இயக்குனர் கெளதம் மேனன் செய்து இருக்கிறாராம். அது சல்மான் கானுக்கும் மிகவும் பிடித்துள்ள நிலையில், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதைப்போலவே, சல்மான் கான் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆகி இருந்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023