விண்ணுக்கு செல்லும் பெண் ரோபோ.! எதற்கென்று தெரியுமா.?

  • இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்துள்ளது, அதற்கு வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • வயோம்மித்ரா ரோபோ மனிதர்களை போலவே சிரிப்பது, பேசுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என வியக்க வைக்கிறது, இதனை வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்து, அதற்கு பெயர் வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது. வயோம்மித்ரா ரோபோ, மனிதர்கள் போல் அச்சு அசலாக  சிரிப்பது, பேசுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என வியக்க வைக்கிறது. விண்வெளியில் வீரர்கள் செய்பவனவற்றை அப்படியே செய்தும் காண்பிக்கிறது. இதனை வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வயோம்மித்ராவை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு ஹாய் என்று சொல்லி வரவேற்றது.

மேலும், வயோம்மித்ராவுக்கு கால்கள் இல்லாதததால் அரை ஹுயுமனாய்டு ரோபோ என அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த ரோபோ பக்கவாட்டிலும் முன்பகுதியிலும் மட்டுமே குனிய முடியும். சில பரிசோதனைகளை செய்யும் வயோம்மித்ரா, இஸ்ரோவுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும். 2022-ம் ஆண்டு, ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு முன்னர் இரண்டு ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த இரண்டு விண்கலங்களிலும் வயோம்மித்ராவை விண்வெளிக்கு அனுப்புகின்றனர். ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 விமானப்படை வீரர்கள் ரஷ்யாவிலும் இந்தியாவிலும் பயிற்சி மேற்கொள்வார்கள்.

விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உடைகளும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்த உள்ள GSLV Mark 3 ராக்கெட்டும் சோதனை செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் இருக்கிறது. இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள் என்றும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் பேட்டி.! மேலும், 1984-ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணம் செய்துள்ளார். ஆனால் இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள், இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.