#WTCFinal2023: இறுதிப்போட்டியில் பயன்படுத்தப்போகும் பந்து இதுதான்…ஐசிசி அறிவிப்பு.!!

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்  டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 

வரும் ஜூன் 7-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது.

WTCFinal2023
WTCFinal2023 Image source file image

மேலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்,ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இங்கிலாந்தில் தீவீரமாக பயிற்சி எடுத்துவருகிறார்கள்.

Dukes ball
Dukes ball Image sourcebusinessupturn

இந்த நிலையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து  பயன்படுத்தப்படும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, இறுதிப் போட்டிக்கு சிவப்பு நிற கூகபுரா பந்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது, டியூக்ஸ்  பந்து பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணியை போலவே மற்றோரு பக்கம் ஆஸ்திரேலிய அணி ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.