உலகளவில் பலி 60 ஆயிரத்தை தாண்டியது..பாதிப்பு 11 லட்சத்தை கடந்தது.!

கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவர்கள் நாடு விட்டு நாடு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,32,017 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை60,331 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,35,902பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 2902 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும், 184 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் :

நாடுகள்  பாதிப்பு  உயிரிழப்பு  குணமடைந்தவர்கள் 
அமெரிக்கா  2,77,522 7,403 12,283
ஸ்பெயின்  1,24,736 11,744 34,219
இத்தாலி  1,19,827 14,681 19,758
ஜெர்மனி  91,159 1,275 24,575
பிரான்ஸ்  82,165 6,507 14,008
சீனா  81,639 3,326 76,755
ஈரான்  55,743 3,452 17,935
இங்கிலாந்து  38,168 3,605 135

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்