உலகம் முழுவதும் கொரோனாவால் 2,08,131 பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  30,02,303 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 30,02,303பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  8,78,813 பேர் குணமடைந்துள்ளனர்.2,08,131 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு  10,08,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.56,521 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,19,764 பேர் பாதிக்கப்பட்டு 23,521 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில்  1,99,414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,977 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.