கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அவசரகால நிதி….ரூ. 7,600 கோடியை அளித்த உலக வங்கி….

உலக நாடுகளை கடுமையாக  நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை  இந்தியாவிலும்  விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு  எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக தற்போது  7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினை,  நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வுகள்  மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று  உலக வங்கியின் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj