#அறநிலையத்துறை அறிவிப்பு- விழாக்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு திருவிழாவும் இவ்வாண்டு நடக்க வில்லை. மேலு ஊரடங்கு தளர்வால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது … Read more

#Breaking- 6நாட்களும் வேலை- நாட்கள்!அரசு அலுவலர்களுக்கு அதிரடி அறிவிப்பு

வாரத்தில்  இனி  அரசு அலுவலகங்களில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு: நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த  உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் … Read more

ஒய்வூதியர்கள் கவனத்திற்கு! அரசு அரசாணை அறிவிப்பு

ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்குகின்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு  ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியர்களை நேரில் அழைப்பார். இவ்வாறு … Read more

சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டால் ஊக்கத்தொகை… பீகார் மாநில முதல்வர் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவின் வேகம் தனியாத சூழலில் பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்புக்காக வெளிமாநிலங்களில் சென்று தற்போது சிக்கி தவித்து வந்த சூழலில் தற்போது ,வெளிமாநிலங்களிலிருந்து அந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதில், அவ்வாறு  திரும்பும் தொழிலாளர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தவும், அவ்வாறு 21 நாட்கள் முடிந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.    பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த … Read more

சினத்தின் உச்சத்தில் அமெரிக்க அதிபர்… உலக சுகாதார நிறுவனத்தை சாடிய அதிபர்…

கொரோனா வைரஸ் தொற்றின்  தாக்கம் குறித்து செய்தியாளர்களிடமும் சமுக வலைதளங்களிலும்  தினந்தோறும் பேசி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளர். அவரது கோவம், சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று அனைவரையும் சிந்திக்க தோன்றுகிறது என்றும்,  கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார்.மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. … Read more

கொரோனா எதிரொலி… விவசாயிகளுக்கு புதிய சலுகையை அறிவிப்பு… மேலும் உதவி தொடர்பு எண்களும் அறிவிப்பு….

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தரப்பினரும் சற்று சறுக்களை சந்தித்தனர். இந்நிலையில் தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்காக ஒரு  புதிய அறிவிப்பை தற்போது  தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ல அனைத்து  வியாபாரிகளும் 1 சதவீதச் சந்தை கட்டணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை எனவும், விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அவசரகால நிதி….ரூ. 7,600 கோடியை அளித்த உலக வங்கி….

உலக நாடுகளை கடுமையாக  நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை  இந்தியாவிலும்  விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த … Read more

பாஜக எம்பிகள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1கோடி நிதியுதவி அளிப்பார்கள்… பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்..

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவது அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இதனை எதிர்கொள்ளவும் தடுப்பு நடவடிக்கிக்கைகளுக்கு நிதியுதவி பலராலும் அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின்  அனைத்து பாஜ எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவர் என்றும்,  மேலும், பாஜக  எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ. 1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு அனுப்பிவைப்பா் … Read more

அவசர பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்… சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு… கட்டுப்பாட்டு அறையும் தயார்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த 144 தடையை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய்ய இராணுவமும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு … Read more

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய போர் கால பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தினார் அதிபர் டிரம்ப்…

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது  1,02,325 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில் மட்டும்  401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு கடும்  தட்டுப்பாடும்  நிலவி வருகிறது. அங்கு ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு … Read more