வாரிசுகளுக்கு பணி.. போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு – அமைச்சர் சிவசங்கர்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

சென்னையில் 14-ஆவது ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கு தொழிலாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார். 8 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என தொழிற்சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக நிதித்துறையுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன் பேசிய அவர், போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்