விஜய் மறைத்து வச்ச ரகசியத்தை உளறி கொட்டிய தளபதி 66 பிரபலம்.!

பீஸ்ட் படம் உருவாவதற்கு முன்பு விஜயின் 65-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கவிருந்தார். அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க விருந்ததாகவும் தகவல்கள் பரவியது.

ஆனால், அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில், விஜயின் 65-வது (பீஸ்ட்) படத்தை நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து பேசிய தமன் ” விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு அவரது 65-வது படத்தில் நிறைவேற்ற வேண்டியது. அந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் சார் இயக்குவதாக இருந்தது. நான் இசையமைக்க வேண்டியது. படத்திற்கு கையெழுத்து எல்லாம் போட்டாச்சு.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போய்விட்டது. அடுத்தாக எப்போது விஜய் சார் படத்திற்கு இசையமைப்பேன் என்று காத்திருந்தேன். அது இப்போது நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ்- தமன் இந்த கூட்டணி உருவாக இருந்தது தெரியாமல் இருந்ததை இசையமைப்பாளர் தமன் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த விஷியத்தை விஜய் கூட வெளியில் கூறவில்லை ஆனால், இந்த ரகசியத்தை தமன் உளறி கொட்டி விட்டார்.