Connect with us

WomenReservationBill: பிரதமர் மோடி எடுக்கும் முடிவு நாட்டின் நலனுக்காகவே இருக்கும்.! மகாராஷ்டிர முதல்வர்

Eknath Shinde

இந்தியா

WomenReservationBill: பிரதமர் மோடி எடுக்கும் முடிவு நாட்டின் நலனுக்காகவே இருக்கும்.! மகாராஷ்டிர முதல்வர்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் தொடக்க நாளான நேற்று மட்டும் பழைய கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம், பழைய நாடாளுமன்றத்தின் கடைசி நாள் கூட்டமாக நேற்று நடைபெற்ற நிலையில், இன்று புதிய கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார். இந்த மசோதா மீதான விவாதம் நாளை மக்களவையிலும், நாளை மறுநாள் மாநிலங்களவையிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி எந்த முடிவை எடுத்தாலும், அது நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலனுக்காகவே இருக்கும். அவரது இந்த முடிவை வரவேற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in இந்தியா

To Top