தமிழகத்தில் ரூ.56,229.54 கோடி முதலீட்டில் 1,74,999 பேருக்கு வேலை வாய்ப்பு -தமிழக அரசு..!

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு வருகிறது. இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.56,229.54 கோடி எனவும், 1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம், அதாவது 2021-22, இன்றைய நாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது. இவற்றில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 56.229.54 கோடி ரூபாய் மற்றும் வேலைவாய்ப்பு 1,74,999 நபர்கள் ஆகும்.

இந்த முதலீடுகள் எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழிற் பூங்காக்கள் வர்த்தகக் கிடங்கு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், இந்த முதலீடுகள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

author avatar
murugan